பழனி, நத்தத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
பழனியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

பழனி:

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கிடவும், காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் 9 ஆயிரமாக வழங்குவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மங்களபாண்டியன், மருத்துவத்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பழனி, தொப்பம்பட்டி ஒன்றிய பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நத்தம் யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார்.செயலாளர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் இராசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தணிக்கையாளர் மோகனரெங்கன், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குப்பான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் அய்யணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com