பழனியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழனி மின்வாரிய அலுவலகம் முன்பு பாரதீய மின் மஸ்தூர் சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

பழனி:

பழனி மின்வாரிய அலுவலகம் முன்பு பாரதீய மின் மஸ்தூர் சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பழனி கோட்டத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது, தொழிலாளர் நல உரிமைகளை பறிக்ககூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்ககூடாது, மின் வினியோக பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com