பாலமேட்டில் திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலமேட்டில் திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்
Published on

மதுரை:

திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியத்தைச் சேர்ந்தவர் மூக்குசாமி. இவருடைய மகன் கண்ணன் (வயது 21). இவர்கள் பாலமேடு முருகையா நகரில் வசித்தபோது பக்கத்து வீட்டில் வசித்த 17 வயது பெண்ணுடன், கண்ணணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை பெண்ணின் தாயார் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண் திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

அவரை கண்ணன் கடத்திச் சென்றிருக்கலாம் என பாலமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட பெண்ணை தேடி வருகிறார்.

மதுரை கோவில்பாப்பா குடிமுல்லைத் தெருவைச் சேர்ந்தவர் மீனா (30). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த மீனா திடீரென்று மாயமானார். அவரை விக்கிரமங்கலம் அருகே உள்ள எழுவம்பட்டியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் 3 பேருடன் சேர்ந்து கடத்திச் சென்றிருப்பதாக அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com