பாலக்காடு அருகே திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பாலக்காடு அருகே திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லட்டிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்(வயது 34). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா(19).

இவர்களுக்கு கடந்த 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) திருமணம் நடந்தது. நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்றனர். இந்த நிலையில் இன்று காலை ரதீஷ் எழுந்து பார்த்த போது அவரது மனைவியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் தேடி பார்த்தார். அப்போது பக்கத்து அறையை திறந்தபோது அங்கு சுகன்யா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதைபார்த்து ரதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து கல்லட்டிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com