பாளை பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

பாளை பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
குடிநீர் தட்டுப்பாடு
குடிநீர் தட்டுப்பாடு
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல பகுதிக்கு, தாமிரபரணி ஆற்றில் மணப்படைவீடு தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பிரதான குழாயை, தற்போது செயல்படுத்தப்பட இருக்கும் அரியநாயகிபுரம் தாமிரபரணி புதிய குடிநீர் திட்ட பணி குழாய்களுடன் இணைக்கும் பணி இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண்கள் 13, 14, 15, 20, 21, 22, 23, 24, 25 மற்றும் 16வது வார்டில் ஒரு பகுதியில் நாளை (வியாழக்கிழமை) குடிநீர் விநியோகம் செய்ய இயலாது.

எனவே பொது மக்கள் கிடைக்கும் குடிநீரை சேமித்த வைத்து சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com