

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது இன்று பகலில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்த வீரர் பெயர் லான்ஸ் நாயக் முகமது நசீர். 35 வயதான இவர், பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அவர் துணிச்சலான நேர்மையான வீரர் என்றும், அவர் தனது பணியை மிகவும் நேசித்ததாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.