பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 10 ஆண்டுக்கு பிறகு பவாத் ஆலம் சேர்ப்பு

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பவாத் ஆலம் இடம் பிடித்துள்ளார்.
பவாத் ஆலம்
பவாத் ஆலம்
Published on

பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. பாகிஸ்தான் - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பேட்ஸ்மேன் 34 வயதான பவாத் ஆலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடைசியாக 2009-ம் ஆண்டில் டெஸ்டில் விளையாடி இருந்தார்.

ஆஸ்திரேலிய தொடரில் 4 இன்னிங்சில் வெறும் 44 ரன் மட்டுமே எடுத்த இஃப்திகார் அகமது கழற்றி விடப்பட்டார். 16 பேர் கொண்ட பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு:-

அசார் அலி (கேப்டன்), அபித் அலி, ஆசாத் ஷபிக், பாபர் அசாம், பவாத் ஆலம், ஹாரிஸ் சோகைல், இமாம் உல்-ஹக், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா, உஸ்மான் ஷின்வாரி.

பவாத் ஆலம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதத்துடன் 250 ரன்கள் அடித்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம். கடைசியாக நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக டுனெடினில் நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடினார்.

தற்போது உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com