காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து தாக்குதல்
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் கடந்த 27-ம் தேதி முதல் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இன்று பிற்பகல் 2.30 மணியில் இருந்து 3.45 மணிவரை பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது சிறியரக துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தியதாகவும் ஜம்முவில் இருந்துவரும் இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com