காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டன.
காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு
Published on

ஸ்ரீநகர்:

சம்பா மாவட்டத்தில் ராம்கர் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய முகாம்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிகளால் சுட்டு ஆவேச தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களும் தீரத்துடன் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பு மோதலில் சேதங்கள் ஏதுமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சம்பா மாவட்டத்தில் உள்ள பஸந்தர் ஆற்றங்கரையோரத்தில் இருந்து வெடிக்காத மோர்ட்டார் ரக குண்டு ஒன்றினை பாதுகாப்பு படையினர் இன்று கண்டெடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com