ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு பணியில் வீரர்கள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள்
Published on

ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் குடியிருப்புகளைக் குறித்து வைத்து தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இருதரப்புக்கும் இடையிலான இந்த சண்டை அதிகாலை 5 மணி வரையிலும் நீடித்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com