ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தகுந்த பதிலடி

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி, கஸ்பா மற்றும் மால்டி பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com