ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
பாதுகாப்பு பணியில் வீரர்கள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று இரவு 10.15 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள டேக்வார் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக கையெறி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com