காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் படையினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். #Pakistantroops #pakistanborder
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் படையினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்டார் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் படையினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் நடத்திய எதிர்தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #tamilnews  #Pakistantroops #pakistanborder

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com