காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் - ஒரு இந்திய வீரர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய ராணுவ வீரர் காயமடைந்தார். #JammuKashmir #UriSector #ceasefireviolation
காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் - ஒரு இந்திய வீரர் காயம்
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய ராணுவ வீரர் காயமடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உரி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இன்று இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஒரு இந்திய வீரர் காயமடைந்தார். அவரை உடனடியாக பாதாமிபாக்கில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புப் படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #JammuKashmir #UriSector #Pakistantroops #ceasefireviolation #soldierinjured

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com