காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தின.
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல்
Published on

ஜம்மு:

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள  டிக்வார் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று காலை சுமார் 7.30 மணியளவில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

இந்திய வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டு தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையில் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்த ஆண்டில் ஜனவரி மாதம் தொடங்கி காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ள அத்துமீறலான தாக்குதல்களில் 16 ராணுவ வீரர்கள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com