சம்ஜவுதா எக்ஸ்பிரஸை தொடர்ந்து தார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலையும் ரத்து செய்தது பாகிஸ்தான்

இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்ள முன்வந்த பாகிஸ்தான் அரசு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து தார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தார் எக்ஸ்பிரஸ் நிறுத்தம்
தார் எக்ஸ்பிரஸ் நிறுத்தம்
Published on

சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976-ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. அதன்பின், காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது.

காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நேற்று முதல் இந்த ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தி விட்டது. வாகா எல்லையில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்தியன் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com