பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைக்குள் ஊடுருவியவர் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்திவர முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #Pakistanintruder #Punjab #heroinseized
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைக்குள் ஊடுருவியவர் சுட்டுக் கொலை
Published on

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் போதைப்பொருள் கடத்திவர முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் அருகேயுள்ள ராம்கோட் என்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லைப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதை கண்ட பாதுகாப்பு படையினர், அவரை நோக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்திவர முயன்ற நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டார். இதையடுத்து அவர்கள் கடத்திவந்த 4 கிலோ ஹெராயினையும் எல்லைப்பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #Pakistanintruder #Punjab #heroinseized

X

Maalai Malar
www.maalaimalar.com