பாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு

பீகார் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் புத்தகத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி அந்நாட்டுக் கொடியை வரைவது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. #Bihar #CleanIndia
பாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு
Published on

பாட்னா:

பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 5000 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படம் ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி அந்நாட்டின் கொடியை வரைவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள ஜமுய் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், இது தவறுதலாக நேர்ந்த பிழை என்று கூறியுள்ளார். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மை இந்தியா புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய படம் யுனிசெப் அமைப்பு பாகிஸ்தானில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்தியதாகும். இதனை அச்சிடும் முன் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியதாக புத்தகத்தை அச்சிட்ட அச்சகமும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். #Bihar #CleanIndia

X

Maalai Malar
www.maalaimalar.com