நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை - பாக். சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #NawazSharif
நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை - பாக். சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Published on

இஸ்லாமாபாத்:

பனாமா லீக்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை குற்றவாளி என கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்த அவர் அந்த வழக்கை மேல்முறையீடு செய்து சந்தித்து வருகிறார்.

நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடையா என தகுதி நீக்க வழக்கில் குழப்பம் எழுந்தது. இதனை அடுத்து, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை என இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. #NawazSharif #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com