11 பயங்கரவாதிகளின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் தளபதி உத்தரவு

பாகிஸ்தானில் பல்வேறு வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்ட 11 பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி ராணுவ தளபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.#PakistanArmychief #confirmsdeathsentence
11 பயங்கரவாதிகளின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் தளபதி உத்தரவு
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடந்த 16-12-2014 அன்று பெஷாவர் நகரில் உள்ள ராணுவப் பள்ளியின்மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்துக்கு பின்னர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து, தண்டிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ரகசிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ கோர்ட்டில் நடைபெற்று வந்த சில வழக்குகளில் வாதப் பிரதிவாதம் முடிவைந்த நிலையில் மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஈடுபட்ட 11 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் ராணுவ தளபதி காமெர் ஜாவெத் பாஜ்வா இன்று உத்தரவிட்டுள்ளார். #PakistanArmychief #confirmsdeathsentence

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com