இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்

இந்திய எல்லைப்பகுதியில் உள்ள ராஜவுரி மாவட்டம் எல்லை கோடு அருகே கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தினர். #India #Pakistan
இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்
Published on

ஜம்மு:

இந்திய எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காஷ்மீர் மாநிலம் ராஜவுரி மாவட்டம் எல்லை கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவமும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் 3 முறை நடத்திய தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் மாலை பூன்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்ததாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com