பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து 8 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். #PakistanAccident #VanCatchesFire
பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து 8 பேர் பலி
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி 16 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு ஒரு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேன், ஜீலம் நகரின் அருகே சென்றபோது திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இதனைக் கவனித்த டிரைவர், வேனின் வேகத்தை குறைத்து நிறுத்தினார்.

அதற்குள் வேன் முழுவதும் தீப்பற்றியது. வேனுக்குள் இருந்தவர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். 4 பேர் ஜன்னல் வழியாக குதித்ததால் காயமின்றி தப்பினர்.

பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PakistanAccident #VanCatchesFire

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com