காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். படைகள் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர்கள் உட்பட 7 பேர் காயம்

இந்திய எல்லைப்பகுதியில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். படைகள் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர்கள் உட்பட 7 பேர் காயம்
Published on

காஷ்மீர்:

பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் நேற்று மாலை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் பூரா பகுதியில் உள்ள சடோவலி கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். அர்னியா பகுதியில் உள்ள ட்ரிவா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். மேலும், இந்த தாக்குதலில் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத்தொடர்ந்து, ராம்கர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com