ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். #PakistanArmy
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா கட் பகுதியிலும், ரஜோரி மாவட்டத்தின் கெரி செக்டார் பகுதியிலும் பாகிஸ்தான் படையினர் இன்று காலை 11 மணியளவில் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் படையினர் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PakistanArmy

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com