பேரையூர் அருகே கால் முறிந்த வேதனையில் பெயிண்டர் தற்கொலை

கால் முறிந்த வேதனையில் பெயிண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர் அருகே கால் முறிந்த வேதனையில் பெயிண்டர் தற்கொலை
Published on

மதுரை:

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள அனுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 50). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. காயம் சரியாகாததால் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி பாண்டி வேதனையுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் அங்குள்ள தோட்டத்தில் பாண்டி வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பாண்டி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பாண்டி மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com