நத்தம் பெயிண்டர் கொலை: குற்றவாளிகளை கைது செய்யகோரி உறவினர்கள் திடீர் சாலை மறியல்

கள்ளக்காதல் தகராறில் பெயிண்டரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யகோரி உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

நத்தம்:

நத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பிரபு (வயது32). பெயிண்டரான இவரை கள்ளக்காதல் பிரச்சினையில் நேற்று ஒரு கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக பிரபுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். அவர்களை கைது செய்ய கோரி இன்று நத்தம் பஸ் நிலையம் அருகே திண்டுக்கல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com