வேடசந்தூர் அருகே பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது

வேடசந்தூர் அருகே கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கன்னடம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 37). பெயிண்டர். இவருடைய மனைவி நந்திஈஸ்வரி (29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நந்திஈஸ்வரிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் ராஜ்குமாருக்கு தெரியவந்ததையடுத்து அவர் கள்ளக்காதலை கைவிடும்படி தனது மனைவியிடம் பலமுறை கூறி கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த வாலிபருடன் தனது உறவை நந்திஈஸ்வரி தொடர்ந்துள்ளார்.

நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த ராஜ்குமார், தனது வீட்டில் இருந்து அந்த வாலிபர் வெளியே சென்றதை பார்த்து மனைவியை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த பிளேடை எடுத்து நந்திஈஸ்வரியின் கழுத்தை அறுத்தார். நந்திஈஸ்வரியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளியேறியது. இதனால் அவர் வலி தாங்காமல் அலறினார். இதைப்பார்த்த ராஜ்குமார் வேடசந்தூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com