பத்மாவதி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய மத்திய பிரதேசம், பஞ்சாப் அரசுகள் தடை

பத்மாவதி திரைப்படம் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பதால் அதனை ரிலீஸ் செய்வதற்கு மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
பத்மாவதி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய மத்திய பிரதேசம், பஞ்சாப் அரசுகள் தடை
Published on

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இப்படத்தைத் வெளியிட தடை கோரி, 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது.

பத்மாவதி திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், ரிலீஸ் தேதியை தாங்களாக முன்வந்து தள்ளிவைப்பதாக தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.

இதேபோல், பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் இப்படத்திற்கு தடை விதிக்க உள்ளதாக கூறியுள்ளார். வரலாற்றைத் திரித்து கூறும் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com