மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 நிதி உதவி- பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

படவேட்டில் 753 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கும் பணியை அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
நிதி உதவி பன்னீர்செல்வம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
நிதி உதவி பன்னீர்செல்வம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலத்தை அடுத்த படவேட்டில் வருவாய்த்துறை சார்பில், 753 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கும் பணியை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் போளூர் தாசில்தார் ஜெயவேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர் கணபதி, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com