இந்திய பிரதமராக மோடி நீடிப்பதை இம்ரான்கான் ஏன் விரும்புகிறார்? - ப.சிதம்பரம் கேள்வி

மோடி பிரதமராக நீடிக்க வேண்டும் என்று இம்ரான்கான் ஏன் விரும்புகிறார்? என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். #PChidambaram #ImranKhan #PMModi
இந்திய பிரதமராக மோடி நீடிப்பதை இம்ரான்கான் ஏன் விரும்புகிறார்? - ப.சிதம்பரம் கேள்வி
Published on

இந்திய பொதுத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து கா‌‌ஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு உருவாகும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் கூறி இருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூற இருப்பதாவது:-

கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது, மசூத் அசாரை அப்போதைய பா.ஜனதா அரசு விடுதலை செய்தது. பின்னர், 2008-ம் ஆண்டு, மும்பை தாக்குதலுக்கு மசூத் அசார் மூளையாக செயல்பட்டான்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.  #PChidambaram #ImranKhan #PMModi

X

Maalai Malar
www.maalaimalar.com