

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்துக்குட்பட்ட ஹுசூர்பூர் பகுதியருகே உள்ள ஹர்வட்டண்ட் கிராமத்தில் நேற்று மாலை ரம்ஜான் நோன்பை நிறைவு செய்வதற்காக பலர் இங்குள்ள மதரசாவில் கூடியிருந்தனர்.
மாலை தொழுகைக்கு முன்னதாக நோன்பு கஞ்சி மற்றும் பலகாரங்களை சாப்பிட்டவர்களில் பலர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, சுமார் 175 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலர் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த மதரசாவில் வழங்கப்பட்ட நோன்பு கஞ்சி மற்றும் பலகார வகைகளின் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.