மேற்கு வங்காளத்தில் இளம்பெண் வயிற்றில் தங்க நகைகள்-நாணயங்கள்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளம்பெண் வயிற்றில் இருந்து 1½ கிலோ எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் அகற்றப்பட்டது.
ஆபரேஷன்
ஆபரேஷன்
Published on

மேற்கு வங்காள மாநிலம் பிர்ஜம் மாவட்டம் மர்கிராம் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இவரது வீட்டில் அடிக்கடி தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகி வந்தன. இதுபற்றி அப்பெண்ணிடம் பெற்றோர் கேட்டபோது பதில் எதுவும் கூறாமல் அழுவார். இதனால் அதுபற்றி அவரிடம் கேட்காமல் விட்டு விட்டனர்.

இந்த நிலையில் இளம்பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை.

இதையடுத்து பிர்பும் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை சேர்த்தனர். அங்கு அவருக்கு வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது தங்க நகைகள், வெள்ளி நகைகள், ரூபாய் நாணயங்கள் இருப்பதை டாக்டர்கள் கண்டு பிடித்தனர்.

அப்பெண் நகைகள் மற்றும் நாணயங்கள் விழுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வயிற்றில் இருந்து நகைகள், நாணயங்களை வெளியே எடுக்க பெண்ணுக்கு ஆபரேசன் செய்தனர்.

இதுகுறித்து அப்பெண்ணின் தாய் கூறும்போது, சற்று மனநலம் பாதிக்கப்பட்ட எங்களது மகளை கவனமுடன் பார்த்து வந்தோம். ஆனால் எப்படியோ நகைகள், நாணயங்களை விழுங்கி இருக்கிறாள்.

நாணயங்களை அவரது சகோதரர் கடையில் இருந்து எடுத்து இருக்கிறாள். சில நாட்களாக சாப்பாட்டை தூக்கி எறிந்து கொண்டே இருந்தாள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com