மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் - ஆட்சியை இழந்த வசுந்தர ராஜே சிந்தியா பேட்டி

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற தோல்வி குறித்து வசுந்தர ராஜே சிந்தியா கூறுகையில் மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #VasundharaRajeScindia
மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் - ஆட்சியை  இழந்த வசுந்தர ராஜே சிந்தியா பேட்டி
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை முதலே அங்கு காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

இறுதியில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வியை ஏற்று, முதல் மந்திரி பதவியை வசுந்தர ராஜே சிந்தியா ராஜினாமா செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள். மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அதிகளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #VasundharaRajeScindia

X

Maalai Malar
www.maalaimalar.com