ஓட்டேரி அருகே இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது

ஓட்டேரி அருகே இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓட்டேரி அருகே இளம் பெண்ணிடம் செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
Published on

சென்னை:

சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலை, ஹைதர் கார்டன் தெருவை சேர்ந்தவர் சோபனா (26). திருவான்மியூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இறங்கி ஓட்டேரி ஜமாலயா பகுதி அருகே சோபனா செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சோபனாவின் செல்போனை பறித்து சென்றனர்.

இது குறித்து சோபனா ஓட்டேரி குற்றபிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று மதியம் ஸ்டிபன்சன் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் 2 பேர் மறைந்திருப்பது தெரிந்து அவர்களை சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் புளியந்தோப்பு ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ராஜேந்திரன்(25), ஜெகன் (23) என்பதும், சோபனாவிடம் செல்போன் பறித்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com