ஓட்டேரியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

ஓட்டேரியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

ராயபுரம்:

சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் நகரில் வசித்து வந்தவர் தன்ராஜ் (30). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சபரி. ஒரு மகன், மகள் உள்ளனர்.

இவரது மாமியார் வீடு மங்களாபுரம் சேமத்தம்மன் காலனியில் உள்ளது. இரவு ஆட்டோ ஓட்விட்டு மாமியார் வீட்டு முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது 4 மோட்டார் சைக்கிளில் 8 பேர் ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அந்த கும்பல் தன்ராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்த தன்ராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தன்ராஜ் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? கூலிப் படையினர் அவரை தீர்த்து கட்டினார்களா? என விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தன்ராஜின் மனைவியின் தம்பி விக்னேஷ்குமார் மளிகை கடை நடத்தி வருவதாகவும் அவரிடம் சிலர் மாமுல் கேட்டு ரவுடித்தனம் செய்ததாகவும் அதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று சந்தேககிப்படுகிறது. கொலை தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com