ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் வி‌ஷம் தின்று தற்கொலை

தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை அடைந்த ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் வி‌ஷம் தின்று தற்கொலை
Published on

ஒரத்தநாடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அசாரூதீன் (வயது 19). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த தேர்வில் அசாரூதீன் தோல்வி அடைந்தார். இதனால் மிகுந்த மனவேதனையுடன் அசாரூதீன் இருந்து வந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் மன உளைச்சலுடன் சோகத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கல்லூரி விடுதியில் இருந்த அசாரூதீன், எலி மருந்தை தின்று விட்டார். இதனால் உயிருக்கு போராடிய அவரை சக நண்பர்கள் மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அசாரூதீன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com