ஒரத்தநாடு அருகே தீ விபத்தில் குடிசை வீடு சாம்பல்

ஒரத்தநாடு அருகே தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து ரூ.25 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.
ஒரத்தநாடு அருகே தீ விபத்தில் குடிசை வீடு சாம்பல்
Published on

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே சமயன்குடிகாடு கிராமம் ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி மல்லிகா (வயது 40).

இவர் நேற்று அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு இரவு சென்றார். அப்போது அங்கு நடந்த கலை நிகழ்ச்சியை அவர் பார்த்துக்கொண்டிருந்த போது அவரது தெருவை சேர்ந்த சிலர் ஓடிவந்து வீடு தீப்பற்றி எரிவதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா வீட்டிற்கு விரைந்து சென்றார். அப்போது வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அவர் ஒரத்தநாடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.

ஆனால் தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து ரூ.25 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com