ஜெயலலிதா இல்லம் பற்றி கருத்து கூற ஸ்டாலின் வக்கீல் அல்ல: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவது சட்ட விரோதம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். இது பற்றி கருத்து கூற ஸ்டாலின் ஒன்றும் வக்கீல் அல்ல என்று ஓ.பி.எஸ். கூறினார்.
ஜெயலலிதா இல்லம் பற்றி கருத்து கூற ஸ்டாலின் வக்கீல் அல்ல: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Published on

நெல்லை:

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 247-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள நெற்கட்டும் சேவலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக அவர் சங்கரன்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவு இல்லம் ஆக்குவது சட்ட விரோதம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். இது பற்றி கருத்து கூற ஸ்டாலின் ஒன்றும் சட்டம் படித்த வக்கீல் அல்ல. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com