தர்மயுத்தம் வெற்றி: பெரியகுளத்தில் ஓ.பி.எஸ். பேட்டி

தர்மயுத்தம் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறிவிட்டதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தர்மயுத்தம் வெற்றி: பெரியகுளத்தில் ஓ.பி.எஸ். பேட்டி
Published on

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தர்மயுத்தம் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று குறிப்பிட்டார்.

மேலும், தேனியில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை செயல்படுத்துவதால் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.  நியூட்ரினோ திட்டத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அந்த திட்டம் வராது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைந்ததும் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், திடீரென அந்த பதவிக்கு சசிகலா வர இருந்த நிலையில் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் கடந்த ஆண்டு இதே நாளில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா தலைமையில் இருந்து பிரிவதாக அறிவித்ததுடன், அவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கியிருப்பதாக கூறினார்.

தற்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, பிரிந்த அணிகள் இணைந்துள்ள நிலையில், தனது தர்மயுத்தத்தின் நோக்கம் நிறைவேறியிருப்பதாக கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com