

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பின்பற்றுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்ற வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டெரக் ஓபிரையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். மேலும் தேர்தல் கமிஷனிலும் கோரிக்கை வைக்க இருக்கிறோம்’ என்று கூறினார்.