ஆபரேசன் ஸ்மைல்- தெலுங்கானாவில் 581 குழந்தைகளை மீட்ட காவல்துறை

தெலுங்கானாவின் சைபராபாத் காவல்துறை, ஆபரேசன் ஸ்மைல் திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டில் 581 குழந்தைகளை மீட்டுள்ளது.
ஆபரேசன் ஸ்மைல்- தெலுங்கானாவில் 581 குழந்தைகளை மீட்ட காவல்துறை
Published on

தெலுங்கானா அரசு குழந்தை தொழிலாளர்களை மீட்கவும், குழந்தைகளை கடத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்துவதை தடுக்கவும், “ஆபரேசன் ஸ்மைல்” எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர்.

அவ்வகையில், சைபராபாத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆபரேசன் ஸ்மைல் திட்டத்திற்கான தனி குழு அமைக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள், குழந்தை நலக் குழுவுடன் இணைந்து இந்த சிறப்பு குழுவினர் தீவிர சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com