புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனம் ஆர்.எஸ்.எஸ். மட்டுமே - ராகுல் காந்தி கண்டனம்

புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RahulGandhi #RSS
புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனம் ஆர்.எஸ்.எஸ். மட்டுமே - ராகுல் காந்தி கண்டனம்
Published on

புதுடெல்லி:

கடந்த ஜனவரி 1 அன்று பீமா கோரேகானில் நடந்த வன்முறையுடன் தொடர்புடையதாக 9 செயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீசார் சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர். மேலும், டெல்லி, பரீதாபாத், கோவா, ராஞ்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வீட்டில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், புதிய இந்தியாவின் ஒரே தொண்டு நிறுவனமாக ஆர்.எஸ்.எஸ் மட்டுமே செயல்பட்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், இந்தியாவில் ஒரே ஒரு தொண்டு நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன. அரசை எதிர்த்து பேசினால் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. புதிய இந்தியாவுக்கு நல்வரவு என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #RSS

X

Maalai Malar
www.maalaimalar.com