ஒன்பிளஸ் வலைதளத்தில் கசிந்த ஒன்பிளஸ் 5T: விரைவில் வெளியாகும் என தகவல்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் புகைப்படம் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கசிந்துள்ளது.
ஒன்பிளஸ் வலைதளத்தில் கசிந்த ஒன்பிளஸ் 5T: விரைவில் வெளியாகும் என தகவல்
Published on

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் உலகின் பல்வேறு சந்தைகளில் விற்று தீர்ந்தும், மறு விற்பனைக்கு அறிவிக்கப்படாத நிலையில், புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், ஒன்பிளஸ் 5T வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து அந்நிறுவனம் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போனினை வெளியிட்டது.

கடந்த சில வாரங்களாக புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வலைத்தளங்களில் கசிந்து வரும் நிலையில், ஒன்பிளஸ் 5T வெளியீடு சார்ந்த உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்முறை ஒன்பிளஸ் வலைத்தளத்தின் குறிப்பிட்ட பக்கத்தில் 5T பதிப்பு ஸ்மார்ட்போனின் புகைப்படம் பதிவிடப்பட்டு, உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. எனினும் புகைப்படத்தில் பெரிய திரை, அதே கால்தடம் ("Bigger screen. Same footprint.") என்பதை குறிக்கும் டேக்லைன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வார்த்தை புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன், முந்தைய ஒன்பிளஸ் 5 மாடலை விட பெரிய திரை கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது. முந்தைய தகவல்களில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே, 18:9 மற்றும் 1080x2160 ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் புதிய ஸ்மார்ட்போன் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் மெல்லிய பெசல்களும், இதன் கைரேகை ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாத முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com