காஷ்மீர்- குல்காம் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஜம்மு:

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஆரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவனை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com