ஜம்மு காஷ்மீர் - குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றனர். #KupwaraEncounter
ஜம்மு காஷ்மீர் - குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் நேற்று நள்ளிரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #KupwaraEncounter

X

Maalai Malar
www.maalaimalar.com