காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
பாதுகாப்பு படையினர்
பாதுகாப்பு படையினர்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

மேல்ஹரா என்ற பகுதியில் தேடுதல்வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதையடுத்து, உடனடியாக பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 1 பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 

என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர்,எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் தற்போதுவரை தெரியவில்லை.  மேலும், என்கவுண்டர் நடந்த பகுதியில் இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சண்ட்புரா பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பயங்கரவாதிகள் இன்று மாலை திடீர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com