காஷ்மீரில் போலீசாரின் என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை - ஒரு வீரர் காயம்

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் போலீசார் இன்று நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும், ஒரு சிஆர்பிஎப் வீரர் காயமடைந்துள்ளார். #Chattabal
காஷ்மீரில் போலீசாரின் என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை - ஒரு வீரர் காயம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள சட்டபால் என்ற பகுதியில் இன்று காலை போலீசார் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட தீவிரவாதியிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சண்டையில் ஒரு சிஆர்பிஎப் வீரர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Chattabal

X

Maalai Malar
www.maalaimalar.com