ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்- ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நடந்த கடும் சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #TerroristKilled
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்- ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம், ஹந்த்வாரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில்  தாக்குதல் நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தொடர்கிறது. #TerroristKilled 

X

Maalai Malar
www.maalaimalar.com