காஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி பலி - சண்டை நீடிப்பதாக தகவல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இரு தரப்பினருக்கும் இடையே சண்டை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி பலி - சண்டை நீடிப்பதாக தகவல்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா அருகே உள்ள உரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து கடுமையாக தாக்குதல் நடத்தினர். சில மணி நேரங்கள் நீடித்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகளுடனான சண்டை இன்னும் தொடர்வதாகவும் அங்கிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு இதே உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com