ஜம்மு-காஷ்மீர்: போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டை ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீர்: போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - ஒரு சப்-இன்ஸ்பெக்டர் வீரமரணம்
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ரானுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீநகர் அருகில் உள்ள ஸகுரா ஜஸ்ரத்பால் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இம்ரான் கான் என்னும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு கான்ஸ்டெபிள் காயமடைந்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

தாக்குதல் நடத்திய ஒரு தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com